haiiii

இலங்கைக்கு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் அனுப்பியுள்ள அதிரடி கடிதம்

- நா.தனுஜா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற தீர்மானத்தைத் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு ஐக்கிய அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிரிஸ் வன் ஹொலென் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். 

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை மக்களின் நீண்டகால நண்பன் என்ற அடிப்படையில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் இலங்கையின் கொள்கைக்கு விசனத்தை வெளியிட்டுள்ளவர்களின் சார்பிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

சடலங்களைத் தகனம் செய்வதென்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்பதுடன், இது இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் துன்பத்தை அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இஸ்லாமிய மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்கான உரிமை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரால் தொற்று ஏற்படலாம் என்று இலங்கையின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை, மனித உரிமை மீறலுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அதுமாத்திரமன்றி உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவரின் மரணத்தின் பின்னரான கௌரவமும், அவரது மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சடங்குகளும் அவரது குடும்பத்தினரின் உணர்வுகளும் மதிக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் அவசியமாகும். எனவே தமது மதநம்பிக்கையின் அடிப்படையில் இறுதிச்சடங்கு முறையைத் தெரிவு செய்வதற்கான உரிமை அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16127,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3945,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: இலங்கைக்கு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் அனுப்பியுள்ள அதிரடி கடிதம்
இலங்கைக்கு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் அனுப்பியுள்ள அதிரடி கடிதம்
https://1.bp.blogspot.com/-e38irNj1vvo/YBULcazavlI/AAAAAAABtjc/FcenPNHr11cAA3SWQlfi7WITlwOuTTzfACLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-e38irNj1vvo/YBULcazavlI/AAAAAAABtjc/FcenPNHr11cAA3SWQlfi7WITlwOuTTzfACLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/01/chris.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/01/chris.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy