இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
01 - அலயாடிவெம்பு பிரதேசததை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும்
02 - கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும்
03 - அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும்
04 - தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மேலும் 320 பேருக்கு இன்றையதினம் இதுவரையில் கொரோனா தொற்று புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- நேரம் 08. 40
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 235 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43854 ஆக அதிகரித்த்துள்ளது.
COMMENTS