கொவிட் இரண்டாம் அலை ஆரம்பமானத்தை தொடர்ந்து இந்நாட்டில் பதிவான கொரோனா மரணங்களில் 60 வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் 277 மரணங்கள் இரண்டாம் அலை ஆரம்பமானதை தொடர்ந்து ஏற்பட்ட மரணங்களாகும் என கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டாம் அலையில் பதிவான மரணங்களில் 193 பேர் 60 வயதிற்கும் அதிகமானோர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நடுத்தர வயதுடைய 72 பேர் கொவிட் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
31 முதல் 40 வயதிற்குட்பட்ட 6 பேரும், 10 முதல் 30 வயதிற்குட்பட்ட 5 பேரும், 10 வயதுக்கு குறைவான ஒரு கொவிட் மரணமும் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
COMMENTS