இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த மூன்று தினங்களில் சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி கொண்டுவரப்பட்ட கடந்த 28ம் திகதி, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொவிட் தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, 29ம் திகதி வெளியான அறிக்கையில் 7 பேரும், நேற்று (30) வெளியான அறிக்கையில் 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் பிரகாரம், கடந்த 3 தினங்களில் மாத்திரம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் இதுவரையான காலம் வரை 105திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றில் உயிரிழந்துள்ளனர்.
COMMENTS