Rin Tv ஸ்தாபகரும் பணிப்பாளருமான GGI Jabeen Mohammad அவர்களின் சில ஆலோசனை குறிப்புகள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் என்ற ஒரு கேள்வி இந்த சமூகத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது.
இது சம்பந்த பட்ட கேள்விகளை இன்று நாம் தொடுக்கிரோம். அவாயவான.
01. கோரிக்கைகளை அரசு ஏற்கும் விதத்தில் நாம் என்ன ஏற்பாடு செய்துள்ளோம்⁉️
02. அரசின் செயல்பாடு இனவாதமா? மதவாதமா? அல்லது அரசியலா
என்று விமர்சிப்பதால் தீர்வு கிடைக்குமா⁉️
03. அரசின் தீர்மானம் விஞ்ஞானமா? அல்லது விஞ்ஞானத்துக்கு முரணானதா⁉️
04. இவ்வாறான விடயங்களை விமர்சிப்பதால் எமக்கு தீர்வு கிடைக்குமா⁉️
05. நாம் எமது மையவாடிகளில் என்ன மாற்றம் செய்துள்ளோம்⁉️
06. சுற்றுச் சூழல் நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் என்ன ஏற்பாடு செய்துள்ளோம்⁉️
07. இதற்கு ஏதாவது மாற்று வழிகள் அல்லது ஆலோசனை செய்துள்ளோமா⁉️
08. முஸ்லிம் பிரதேசங்களிள் எமது மக்கள் நெரிசலாக வாழுகின்ற சமூகம் என்பதனால் ,இந்த வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகின்றோமா என சிந்தித்துப் பார்த்தோமா⁉️ இந்த வகையில் எமது சமூகமானது, நெருக்கடியான சுற்றுச்சூழலில் வாழ்கின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது.
09. இந்த வைரஸின் தொற்று எமக்குள் பரவாமல் இருப்பதற்கு எமது சுற்றாடலை எவ்வாறு அமைத்துக் கொண்டுள்ளோம்⁉️
10. எமது சமூகத்தினுள் இந்த வைரஸ் கூடுதலாக பரவுவது ஏன் என்று சிந்தித்தோமா⁉️
11. நெருக்கமாக வாழும் எமது சூழலில் வைரஸ் பரவாது இருக்க எம்மால் என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ள பட்டிருக்கின்றன⁉️
12. திட்டமிட்டு முஸ்லிம் பிரதேசங்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறதா என்ற சந்தேகத்தை நாம் எவ்வாறு தீர்த்துக் கொள்வது⁉️
13. இவ்வாறான விடயங்களில், நாம் மற்றவர்களுக்கு குறை கூறாமல் நம்மை சரி செய்து கொள்வதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தான் என்ன? போன்ற கேள்விகள் சரமாரியாக எம் சமூகத்தில் தோன்றிவிட்டன.
அந்த வகையில் ரின் ஊடக ஸ்தாபகரான எனக்கு தோன்றிய சில ஆலோசனைகளை நான் முன்வைக்கின்றேன்.
01 - ஊர் நிர்வாகம் மற்றும் எமது ஊர்களில் உள்ள சகல அமைப்புகளும் உடனடியாக ஒன்றுபட வேண்டும்.
02 - தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறை போன்ற அரச அதிகாரிகளுடன் ஒன்று படவேண்டும்.அந்தக்குழு இது தொடர்பான ஆலோசனைகள் பெற்று செயல்பட வேண்டும்.
03 - இவ்வாறுஅவர்களுடன் நெருங்கிய சமரச உறவு பேணப்படும் அதே நேரத்தில், இனவாதிகளின் சதிகளை முறியடிக்க கூடிய உதவிகளை அவர்கள் எமக்கு வழங்குவார்கள்.
04 - சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் சமூகமாக எம்மை வெளிக்காட்ட வேண்டும்.
05 - ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யும் மையவாடிகளில் நிலத்தடி நீர் மட்டம் பரிசோதனைக்கு உட்படுத்தி அதற்குரிய தரவுகளை ஆதாரபூர்வமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
06 - முக்கியமாக அடக்கஸ்தலங்களின், பரப்பளவில் குறைந்தபட்சம் ஒரு பகுதியை ஒதுக்கி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, எட்டு அடி ஆழத்திற்கு குறிப்பிட்ட பகுதியின் மண்ணை அகற்றி, நிலத்துக்குள் சீமெந்து கான்கிரீட்டில் ஆன ஒரு தொட்டியில், நீர் வெளியில் செல்லாதவாறும், வெளியில் உள்ள தண்ணீர் அந்த பகுதிக்கு செல்லாதவாறும் சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த தொட்டி உருவாக்கப்பட வேண்டும்.
மீண்டும் அந்தத் தொட்டியை ,எட்டடி ஆழத்திற்கு மண் நிரப்பப்பட்டு, ஜனாஸாக்களை அடக்கம் செய்யக் கூடிய வகையில் உருவாக்கிக் கொள்வதே சிறந்தது.
ஒவ்வொரு ஜனாசா களுக்கும் சிமெண்ட் தொட்டி அமைக்கும் பாரிய செலவிற்கு ஒரு தீர்வாக அமையும்.
அதேவேளை எந்த ஒரு காலத்திலும் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் நேரங்களில் இந்த ஏற்பாடு பொருத்தமாக அமையும் என்று நாம் நினைக்கின்றோம்.
இந்த நாட்டின் சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு எம் சமூகமும் தயார் நிலையில் உள்ளது, என்ற விடயத்தை சுகாதாரப் பிரிவு மற்றும் காவல்துறையினறை நாம் உணர்த்துவதும், அவர்களுடன் நாம் வைத்துக் கொள்ளும் சுமுகமான உறவும் இங்கு முக்கியமானது.
இவை எம் கருத்தில் தோன்றிய, ஜனாசாக்கள் எரிக்கப் படுகின்ற விடயத்தினை தடுப்பதற்கான ஏதுகளாக அமையும் என்று நம்புகிறேன்.
நன்றி
சிந்தனை தொகுப்பு
GGI Jabeen Mohammad
COMMENTS