கொரோனா பொருந்தொற்றினால் விமானப்போக்குவரத்துகள் பெருமளவில் முடங்கியபோதும் 2020ஆம் ஆண்டிலும் வர்த்தக விமான விபத்துகளில் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
நெதர்லாந்து விமானப்போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ70 வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஆண்டில் உலகெங்கும் விமான விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 299 ஆக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதுவே 2019 ஆம் ஆண்டில் 257 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஜனவரியில் ஈரான் இராணுவத்தால் உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட 176 பேர் கடந்த ஆண்டு உயிரிழப்பில் பாதிக்கு அதிகமாக உள்ளது.
கடந்த மே மாதம் கராச்சி நகரில் பாகிஸ்தான் விமானம் விழுந்த விபத்தில் 98 பேர் உயிரிழந்தனர். இது மனிதத் தவறால் ஏற்பட்ட விபத்து என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
எனினும் முந்தைய ஆண்டின் 86 விபத்துச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அது 40 ஆக குறைவடைந்திருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
COMMENTS