கொழும்பு கிழக்கு முனையம் எந்தவொரு தரப்பினருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்தவித பயனும் இல்லை.
கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமாளிக்கப்பட மாட்டாது.
அவ்வாறு எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை.
இதற்காக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை.
தம்முடன் இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடியிருந்தால் தெளிவுப்படுத்தியிருப்பேன்.
கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய அமைச்சரவையில் பெரும்பாலானோருக்கு விரும்பம் இல்லை.
ஜனாதிபதியும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளார்.
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் கொள்கை தமது அரசாங்கத்திடம் இல்லை பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

COMMENTS