இலங்கை நாட்டின் அரசியல் நிலவரத்தை கருதி பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப் பட்ட இந்த கட்சி பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம் கட்சிகளாளும் அதன் தலைமைகளளும் கைவிடப்படபிரகா சூழ்நிலையில் நீதி மன்றம் சென்று இந்தக் கட்சியை மீண்டு எடுத்துள்ளோம்.
இந்தக் கட்சியின் முக்கியத்துவம் பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தூர நோக்கு அரசியல் சிந்தனையாக உருவாக்கப் பட்ட கட்சி என்ற ஒரே காரணத்தினால் இந்த கட்சியை மீண்டும் எடுத்து உள்ளோம் முதலில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை கிழக்கில் நிலை கொள்ள வைத்து விட்டு நாடளாவிய ரீதியில் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து தூரநோக்குடன் அரசியலில் செயல் பட உருவாக்கப் பட்ட கட்சிதான் தேசிய ஐக்கிய முன்னணி பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப் பட்ட கட்சிக்கு அவர் சூட்டிய சின்னம் தான் சமாதான பறவை புறா சின்னம் பெருந் தலைவரின் ஆழ்ந்த சிந்தனை அரசியல் செயலிழந்து அரசியலில் அனாதையான சமாதான சின்னத்தை சுமந்த தேசிய ஐக்கிய முன்னணி கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் கௌரவத்துக் குரிய முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்கள் என்ற விடயத்தை முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
அன்று பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப் பட்ட அதே யாப்பின் பிரகாரம் அதே சிந்தனையில் செயல் பட தற்போதைய தலைவர் அசாத் சாலி அவர்களும் தயார் நிலையில் உள்ளார் அன்று பெருந் தலைவர் அஷ்ரப் எவ்வாறு வாலிபர்களை வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினாரோ அதே சிந்தனையில் எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் செய்யக்கூடிய ஒரு கட்சியாக தேசிய ஐக்கிய முன்னணி உருவாக வேண்டும் என்ற அவருடைய சிந்தனையை இன்றைய தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தயாராக உள்ளார் என்ற விடயத்தை உங்களுக்கு அறியத் தருவ தோடு அன்று வாலிபர்களை முன்னிலைப் படுத்தி உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று வாலிபர்களே இல்லாமலாகி கட்சியும் முதுமை அடைந்து விட்டது.
அரசியல் தலைமைகள் சிறப்பான சேவைகளை எமக்கு வழங்கினாலும் எதிர்கால தலை முறைக்கு அந்த அரசியலை கையளிக்க தவறி விட்டார்கள் இன்றைய வாலிபர்கள் ஒன்றிணைந்து தேசிய ஐக்கிய முன்னணி இன் தற் போதைய தலைவர் அசாத் சாலி இடம் கேட்டவுடன் எதிர்கால சந்ததிகளுக்காக உருவாக்கப் பட்ட இந்த கட்சியை பொருத்தமானவர்கள் முன் வந்தாள் ஒப்படைக்க தயாராக உள்ளேன் எனறு அவருடைய நிலைப்பாடினை தெரியப் படுத்தினார்.
அல்ஹம்து லில்லாஹ் எதிர்கால தலைமுறைக்கு அரசியலில் உயிர் கொடுக்க பெரும் தலைவர் அஷ்ரப் உருவாக்கிய இந்த கட்சியாவது எமக் உண்டு என்ற சந்தோஷத்தில் பணிகளை ஆரம்பித்துள் ளோம் நாடு முழுவதிலும் இருந்து கட்சிக்கு உறுப்பினர்கள் ஒன்றிணைக்கும் பணி வெகுவிரைவில் ஆரம்பமாகும் என்ற விடயத்தை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
அபிவிருத்திக்காக விலை போகும் அரசியலை விட்டு விட்டு உரிமைக்கான அரசியலை ஆரம்பிப்போம் வாலிபர்களே ஒன்றிணைவோம் உரிமைக்காகப் போராடி உரிமைகளை வென்றெடுப்போம்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டி இலக்கங்கள்
0094 77 897 99 77
0094 72 520 34 04
அல்லது காரியாலயத்திற்கு நேரில் சமூகம் தரமுடியும்
இலக்கம் 16 இரண்டாம் ஒழுங்கை
நாவல
ராஜகிரிய
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம் நன்றி
ஊடக
அனுசரணை
ரின் டிவி
COMMENTS