பாராளுமன்றத்தில் இன்று 463 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இதன்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS