உலகநாடுகள் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கான வேண்டுகோள்களை விடுத்துள்ள சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் மாத்திரம் ஏன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகள் ஏற்கனவே மருந்துகளை கொள்வனவு செய்துள்ளன தென்னாசிய நாடுகளான பங்களாதேஸ் இந்தியா போன்றவையும் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளன என சஜித்பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கை மாத்திரம் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது குழுக்களை நியமித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உள்ளுர் மருந்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சி தலைவர் அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் அந்த மருந்தினை ஊக்குவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
COMMENTS