இலங்கையில் இன்றைய தினம் (11) காலை வரையிலும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 543 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களுள், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர் 7 பேரும், ஏனைய 536 பேரும் நாட்டிற்குள் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 217 பேர்களாவர் என்பதுடன், கம்பஹா மாவட்டத்தில் 85 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 40 பேரும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 194 பேரும் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (11) காலை வரையிலும், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புப்பட்ட கொத்தணியில் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,596 ஆகும். இவர்களில் 38,567 பேர் தற்பொழுது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணி - 3,059 (பூரண குணம் அடைந்துள்ளனர்) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி- 35,508
இன்றைய தினம் (11) இலங்கையினுள் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,382 என்பதுடன், இவர்களில் 41,324 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இன்றைய தினம் (11) வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 6,826 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தினம் (11) காலை வரையிலும் (கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில்) வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 487 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று காலை (11) கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த ஒருவரும், இரத்தினபுரி சேர்ந்த ஒருவரும், மற்றும் கொழும்பு - 14 யை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இதன்படி இன்று (11) வரையிலும் இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (11) வரையில் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற 73 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,961 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (10) 16,202 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (11) காலை UL 1264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் சவுதி அரேபியாவில் இருந்து 100 பேரும், QR 668 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் கட்டாரிலிருந்து 81 பேரும், UL 208 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 290 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்
மேலும் இன்றைய (11) தினம் UL 102 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் மாலைதீவிலிருந்து 36 பேரும், UL 184 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் பாகிஸ்தானில் இருந்து 2 பேரும், TK 730 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து 2 பேரும், UL 186 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் பாகிஸ்தானில் இருந்து 4 பேரும் மற்றும் UL 554 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் ஜேர்மனியில் இருந்து மேலும் குழுவினரும்; நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

COMMENTS