நாளைய (05) பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கடந்தப் பொதுத்தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியலூடாக ரத்ன தேரர் பாராளுமன்றத்துக்கு வரவுள்ளார்.
களுத்துறை மாவட்ட எம்.பியாக 2004ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ரத்ன தேரர், 2010ஆம் ஆண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டும் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS