அன்புடன் - கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில அவர்களுக்கு...
நல்ல தேக ஆரோக்கியத்தோடு நீங்கள் இருக்கின்ற நிலையில் இந்த மடலை நீங்கள் படிக்க அல்லாஹ் நாடுவானாக என பிரார்த்தனை செய்தவனாக!
08/01/2020 அன்று தாங்கள் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். தவிரவும் ஜனாஸா எரிப்பு ஹராம் என்று அல் குர்ஆனில் எங்கேனும் கூறப்பட்டுள்ளதா? என தாங்கள் கேள்வியும் எழுப்பியுள்ளீர்கள்.
அல் குர்ஆனை படித்த நீங்கள், அதில் பொதிந்திருக்கும் இறை நம்பிக்கை கோட்பாடு, ஆதாரபூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞானத்திற்கு முரண்படாத கூற்றுக்கள், மறுவுலக வாழ்வு, மனித வாழ்வுக்கு அவசியமான போதனைகள், அறிவுரைகள், ஏவல், விலக்கல் கட்டளைகள், கோட்பாடுகள் என்று எதையும் கருத்தூண்றி படிக்காது அரைகுறையாக விளங்கியதன் விளைவே தாங்கள் இவ்வாறு பேசக் காரணம் என்று நினைக்கின்றேன்.
ஆதலால் நல்ல நோக்கோடும், திறந்த மனதோடும் அல் குர்ஆன் முழுவதையும் படிக்குமாறும். கூடவே அதன் விளக்கவுரை என வர்ணிக்கப்படுகின்ற இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் மூலமான தெளிவுரைகளையும் படிக்க வேண்டும் என உங்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாஸா எரிப்பு ஹராம் என குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை, அப்படி இருந்தால் ஆதாரம் தாருங்கள் எனக் கேட்ட உங்கள் கேள்விக்கு முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் பதிலளிக்க வில்லை என்பதற்காக உங்களது வாதம் உண்மையாகிவிடாது என்பதையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து சுகாதார ஒழுங்கு முறைகளிலும் WHO வின் வழிகாட்டுதல்களை ஏற்று, பின்பற்றும் நீங்கள், ஜனாஷா எரிப்பு விவகாரத்தில் மட்டும் உலக நாடுகளையே ஒதுக்கி ஓரம் தள்ளிவிட்டு, தனித்துவமாக செயற்படும் போது, அல் குர்ஆனில் ஹராம் என்று கூறப்பட்டுள்ளதை நாம் ஆதரம் காட்டனால் மட்டும் எரிப்பதை தவிர்த்து அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் நாம் நன்கறிவோம்.
அரசாங்கமே பொருத்தமானவர்கள் என அடையாளம் கண்டு, நியமித்த நிபுணர் குழுவின் விஞ்ஞான பூர்வமான, அறிவார்ந்த ஆய்வறிக்கையில் ஜனாஸாவை அடக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், குறித்த நிபுணர் குழுவுக்கு ஏதோ நாம் இலஞ்சம் கொடுத்து
அறிக்கை முடிவை மாற்றியமைத்தது போன்று அந்தக்குழுவில் சந்தேகம் ஏற்படுத்துகின்றது என கூறும் நீங்கள் அல் குர்ஆனில் ஆதரம் காட்டி ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும்.
ஆயினும் உங்களது கருத்துப் பதிவால் எங்களது அல் குர்ஆனை பிழையாக எவரும் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்கு பதிலளிக்க விரும்புகின்றேன்.
அல் குர்ஆன் எனும் எமது வேதப் புத்தகமானது காலத்தால் அழியாதது. எக்காலத்துக்கும், எல்லோருக்கும் பொருத்தமானது. ஆழமான கருத்துக்களையும் தெளிவான வழிகாட்டுதலையும் கொண்டது,
எச்சில் துப்புவது, மூக்குச் சிந்துவது, சிறு நீர் கழிப்பது என்று மனிதனின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் கூட எங்களது உயிரிலும் மேலான இறைத் தூதர் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை செய்தும் தொற்று நோய் பரவிய ஊர்களை தனிமைப்படுத்த வழிகாட்டுதல்களையும் வழங்கிய எமது இஸ்லாமிய மார்க்கம் அதன் தாக்கத்தால் மரணிப்பவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்று வழிகாட்ட வில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றேன்.
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا
نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى (طـه:55)
"உங்களை அதில் (மண்ணில்) இருந்து படைத்தோம். அதிலேயே உங்களை மீட்டுவோம் அதிலிருலிருந்தே மீண்டும் ஒருமுறை உங்களை வெளியேற்றுவோம்"(தாஹா:55)
فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا
تُخْرَجُونَ (لأعراف:25)
நீங்கள் இந்த பூமியில்தான் வாழ்வீர்கள். அதில்தான் மரணிப்பீர்கள். அதில் இருந்துதான் ( மீண்டும் ) வெளியாக்கப்படுவீர்கள். (அல்-அஃராஃப்- 25)
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُثُمَّ إِذَا شَاء أَنْشَرَهُكَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
[عبس:21-23]
பின்னர் அவன் (அல்லாஹ் மனிதனை) மரணிக்கச் செய்தான். பின்னர் அவனை மண்ணறைக்குள் ஆக்குகின்றான். அவ்வாறன்று, அவன் (அல்லாஹ்) ஏவியதைச் செய்யவில்லை (எனக் கூறப்படும்).(அபஸ :21)
ஆதம் நபி (அலை) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்று அடக்கம் செய்யத் தெரியாமல் தடுமாறிய போது மரணிப்போரை மண்ணில் அடக்கம் செய்யும் வழி முறையை ஒரு காகம் மற்றொரு காகத்தைக் கொன்று பூமியில் புதைப்பதைக் காண்பிப்பதன் மூலம் தனது சகோதரனைக் கொன்றவருக்கு இவ்வாறுதான் புதைப்பது என்பது பற்றிக் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என்ற வரலாற்றைப் பற்றி குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.
فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي ۖ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ . ( المائدة/31)
பூமியில் தோண்டி
(அது கொன்ற காகத்தைப் புதைப்பது போல கொலை செய்யப்பட்ட) தனது சகோதரனின் உடலைப் புதைப்பதற்காக உடன் அல்லாஹ் காகத்தை அனுப்பினான். அவன் எனது கைசேதமே! இந்த காகத்தைப் போன்றவாது நான் எனது சகோதரனின் பிரேதத்தை புதைக்க வக்கற்றவனாக (அறிவில்லாமல்) ஆகிவிட்டேனே! எனக் கூறி கைசேதமடைந்தோரில் ஒருவனாகிவிட்டான் ( அல்மாயிதா- 31)
அமைச்சர் அவர்களே! நாம் காகத்தை விடவுமா கொடியவர்களாகிப் போனாம்! என்ற கேள்வி இங்கு எழுதுவதைத் தவிர்க்க முடியாது.
மேலே நாம் எடுத்துக்காட்டும் குர்ஆனிய வசனங்களையும் நாமும் நீங்களும் ஏற்றுக் கொண்ட ஆதம் நபியின் புதல்வர்கள் தொடர்பான சம்பவத்தையும் மாத்திரம் ஆதாரமாகக் கொண்டாவது நாம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறவில்லை.
மாறாக!
[ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ [الإسراء /70
நிச்சயமாக நாம் ஆதமின் மக்களை கண்ணியப்படுத்தி இருக்கின்றோம். (அல்-இஸ்ரா-70) என்ற திருக்குர்ஆன் வசனம் மற்றும் ஜனாஸா தொடர்பான எங்கள் தூதரின் உயரிய, அழகிய வழிகாட்டல்கள் அனைத்தையும் சேர்த்தே மரணித்த முஸ்லிம்களை மாத்திரமின்றி, அனைத்து மனிதர்களையும் மண்ணில் கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என நம்பிக்கை கொள்கின்றோம்.
இறுதியாக!
புனித அல்-குர்ஆனை ஏதோ உங்கள் சுயநலனுக்காகவோ என்னவோ புரட்டிப்படித்தமை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். மேலும் அது உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்றும் பிரார்த்திற்கின்றேன்.
தவிரவும் தொடர்ந்து படியுங்கள் பல உண்மைப் புதையல்களைக் காண்பீர்கள் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
அப்போதுதான் குர்ஆனியப் போதனைகளை நாம் இந்த நாட்டில் கடைப்படிப்பதை நீங்கள் மானுசீகமாகவேனும் சரி காண்பீர்கள்.
நட்புடன்
எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி
47/1 ஹிஜ்ராபுர, திகன,
ரஜவெல்ல
ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී, ඒකාබද්ධ කැබිනට් ප්රකාශක, අමාත්ය උදයගම්මන්පිල මහත්මයාණෙනි...
ඔබ සෞඛ්ය සම්පන්නව සිටියදී මෙම ලිපිය කියවීමට සර්වබලධාරී දෙවිඳුන් වන අල්ලාහ් ඔබට ආශීර්වාද කරත්වා!
2021/01/07 දින පාර්ලිමේන්තුවේදී ඔබ කළ කතාවේදී මුස්ලිම්වරුන්ගේ දේහය ආදාහනය කිරීමේ ප්රශ්නය සම්බන්ධයෙන් ඔබ බොහෝ අසත්ය අදහස් ප්රකාශ කර තිබේ. එමෙන් ම උතුම් කුර්ආනයේ කොතැනක හෝ ආදාහනය කිරීම හරාම් යැයි සඳහන් වේද? යන්නෙන් ද ඔබ ප්රශ්න මතු කර තිබේ.
ඔබගේ මෙම ප්රකාශයෙන් උතුම් කුරානය පිළිබඳ ඔබ සතුව තිබෙන අල්ප දැනුම සහ අනවබෝධය මනාව ගම්ය වන ආකාරය මම දකින්නෙමි. එහි ගැබ් වී තිබෙන දේව විශ්වාසයේ මූලධර්මය, විද්යාවට පටහැනි නොවන උතුම් කුරානයේ සඳහන් විද්යාත්මක තතු , මරණින් මතු ජීවිතය, මානව ජීවිතයට අත්යවශ්ය වන
ඉගැන්වීම් සහ උපදෙස්, අණකිරීම් සහ වැළැක්වීම් ප්රකාශ මේ කිසිවක් අවබෝධයකින් නොකියවූ ඔබට
උතුම් කුර්ආනය හොඳ චේතනාවෙන් හා විවෘත මනසකින් කියවන ලෙසත්, දේවදූත මුහම්මද් තුමාගේ චරිතාපදානය පිළිබඳ විවරණය කියවන ලෙසත් මම කාරුණිකව ඉල්ලා සිටිමි.
උතුම් කුර්ආනයේ කිසිම තැනක දේහය ආදාහනය කිරීම හරාම් බව සඳහන් කර නැත. එබැවින් සාක්ෂි ලබා දෙන ලෙස ඉල්ලා සිටි විට මුස්ලිම් ඇමතිවරු කිසිවෙකුත් ඔබේ ප්රශ්නයට පිළිතුරු නොදුන් බැවින් ඔබේ තර්කය සැබෑ නොවන බව ඔබ තේරුම් ගත යුතුය.
ලෝක සෞඛ්ය සංවිධානයේ සියලු මාර්ගෝපදේශ පිළිගෙන අනුගමනය කරන ඔබ, ආදාහනය කිරීමේ කාරණයේදී පමණක් ලෝක ජාතීන්ගෙන් බැහැරව සුවිශේෂි නීතියකින් කටයුතු කරන විට, උතුම් කුරානයේ හරාම් ලෙස සඳහන් කර ඇති දේට සාධක දැක්වූ පමණින් භූමදානය කිරීමට ඉඩ නොදෙන බව අපි දනිමු.
රජය විසින් ම පත් කරන ලද විශේෂඥ මණ්ඩලයේ විද්යාත්මක හා බුද්ධිමය අධ්යයනයේ දී දේහය භූමිදානය කළ හැකි යැයි යෝජනා වී තිබුණ ද, අපි එම විශේෂඥ මණ්ඩලයට අල්ලස් දී යෝජනාව විකෘති කලාක් මෙන් ඔවුන්ගේ ප්රකාශය පිළිබඳ සැක තිබෙන බවට පවසන ඔබට.
උතුම් කුර්ආනයේ සාධක සනාථ කිරීමනේ කිසිදු ඵලක් නොවෙන බව අපි දනිමු.
කෙසේ වෙතත්, ඔබගේ අදහස් දැක්වීමේදී අපගේ උතුම් කුර්ආනය කිසිවෙකුත් වරදවා තේරුම් නොගත යුතු නිසා මම ඔබට පිළිතුරු දීමට කැමැත්තෙමි.
උතුම් කුරානය කාලයත් සමග වෙනස් නොවන සෑම විටම සහ සියල්ලන්ට ම සුදුසු අමරණීය දේව හෙලිදරව්වකි. එය ගැඹුරු අදහස් වලින් සහ පැහැදිලි මග පෙන්වීමකින් සමන්විත වේ.
සර්වබලධාරී දෙවිඳුන් වන අල්ලාහ්ගේ අවසන් දූතයාණන් වන මුහම්මද් තුමාණෝ කෙළ ගැසීමේ ක්රමය, කිවිසුම් යෑමේදී හැසිරිය යුතු ආකාරය සහ මුත්රා කිරීමේ දී ඇතුළු සියලුම මිනිස් ක්රියාකාරකම් වලදී අනුගමනය කළ යුතු විනය අපට උගන්වා ඇති බව මම ඔබට කියමි.
බෝවන රෝග ගැන අනතුරු අඟවන සහ බෝවන රෝග පවතින නගර හුදකලා කිරීම සඳහා මාර්ගෝපදේශ සපයන අපගේ ඉස්ලාමීය ආගම එහි බලපෑමෙන් මිය යන අයගේ සිරුරු ආදාහනය කිරීමට මග පෙන්වන්නේ නැති බව මම මෙහිදී පෙන්වා දීමට කැමැත්තෙමි.
මෙහි ම (පස) අපි ඔබ ව මවා ඇත්තෙමු.මෙහි ම (පස) අපි ඔබව ආපසු යෑමට සලස්වන්නෙමු.තවද මෙහි සිට ම යලිත් වරක් ඔබව පිටකරන්නෙමු.(20 වෙනි පරිච්ඡේදය 55 වෙනි වැකිය)
නුඹලා මෙම මහ පොළොවෙහි ජීවත් වන්නෝය. එහි මරණයට පත්වන්නෝය.තවද නුඹලා මෙහි සිට ම නැවත නැගිට්ටවනු ලබන්න්නෝය.(7 වෙනි පරිච්ඡේදයේ 25වන වැකිය)
පසුව ඔහු ඔබ මරණයට පත් කළේය.තවද ඔබ මිනීවලට ඇතුළු කරවිය.පසුව ඔහු(අල්ලාහ්) කැමතිවන විටකදී ඔබ ව (අල්ලාහ්) නැවතත් නැගිට්ට වන්නේය.අවධාරණයයි! ඔහුට (ඉටු කිරීමට) ඔහු අණකළ දේ තවමත් නිම නොකළේය.(80 වෙනි පරිච්ඡේදය 21-23 දක්වා වැකි)
අප ඉහත සඳහන් කළ උතුම් කුරානයේ වාක්යයන් අප සහ ඔබ පිළිගත් ආදම් නබිතුමාගේ පුතුන් සම්බන්ධ සිද්ධිය පදනම් කරගෙන පමණක් මළවුන් භූමදාන කළ යුතු යැයි අපි නොකියමු.
නියත වශයෙන්ම අපි ආදම්ගේ ජනයාට ගෞරව කර ඇත්තෙමු. (17වන පරිච්ඡේදයේ 70 වන වැකිය)
අල් කුර්ආන් වාක්යය සහ මෘතදේහ පිළිබඳව අපගේ දූතයාණන්ගේ අලංකාර මඟ පෙන්වීම් මියගිය මුස්ලිම්වරුන් පමණක් නොව සියලු මනුෂ්යයන්ද ගෞරවාන්විතව පසෙහි වළලනු ලැබිය යුතු බව අපි විශ්වාස කරමු.
අවසාන වශයෙන්, ශුද්ධ වූ අල් කුර්ආනය ඔබගේ ප්රයෝජනය සඳහා හෝ යම් දෙයක් කියවීම ගැන මම ඉතා සතුටු වෙමි. එය ඔබට යහ මග පෙන්වනු ඇතැයි මම යාච්ඥා කරමි.
ඔබ එය දිගටම කියවන ලෙසත් ඔබ එය කියවීමෙන් එතුල සැග වී තිබෙන නිධානයන් මුදුන්පත් කරගැනීමේ හැකියාවන් ඔබට ලඟාකර ගත හැකි වනු ඇත.
උතුම් කුර්ආනයේ ඉගැන්වීම් මේ රටේ අනුගමනය කිරීම මානුෂීය වන්නේ යැයි ඔබට තේරුම් ගැනීමට හැකි වනුයේ එවිටය.
මෙයට,
මිත්රශීලී
එම්.ජේ.එම්.
රිස්වාන් මදනි
47/1 හිජ්රාපුර, දිගන,
රාජවෙල්ල.
පරිවර්තනය : පන්නව, නාසික් ෆාරුක් තන්වීරි , මදනි.
COMMENTS