இலங்கையில் வியாழக்கிழமை (28) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாகயிருக்கும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
COMMENTS