இந்தியாவிலிருந்து நாளை (27) இறக்குமதி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இலங்கைக்கு நாளை (27) இறக்குமதி செய்யப்படாது.
அந்த தடுப்பூசிகளை ஏற்றியிருக்கும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம், நாளை மறுதினம் (28) பகல் 11 மணியவிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
இந்தத் தகவலை, இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
COMMENTS