தற்போது அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் தங்களது சொந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர் இடாப்பில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான உரிமைக் கோரிக்கை படிவம் ஒன்றை பூர்த்தி செய்து இம்மாதம் 19 ம் திகதிக்கு முன்னர் தங்களது கிராம சேவையாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்களுக்கு விசாரணை நடைபெற்று முடிவு கிடைக்கும் எனவும் அறிய முடிகிறது.
இதனால் வாக்களித்த வாக்காளர்கள் மிகுந்த கவலையும் அசௌகரியத்திற்கும் உள்ளாகி உள்ளார்கள் எனவே இவர்களது வாக்குளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை பெற்றுக் கொடுப்பது அவர்களது தார்மீக கடைமையாகும்.
COMMENTS