வவுனியா பசார் வீதியின் ஒருபகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதிகள் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுவருகின்றன.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதிகளுக்கு தமது தேவை நிமித்தம் பயணித்த பொதுமக்களின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டாணிசூர் பகுதியை சேராதவர்கள் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுவருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேநேரம் பட்டாணிசூர் பகுதியில் நேற்று இரவு முதல் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
COMMENTS