மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவ திசையில் பயணித்த லொறி ஒன்று வீதியின் குறுக்காக பயணித்த மாணவியை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
கிரிதல பகுதியை சேர்ந்த 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
COMMENTS