இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் இன்று (20) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் பயணித்துக்கொண்டிருந்தபோதே இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆணைமடு - சிலாபம் வீதியில் இன்று காலை 7.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் அவரின் பாதுகாவலர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
COMMENTS