கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சீனா அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது பற்றி கடந்த வாரமே இலங்கை அரசாங்கத்திற்க்கு தெரிய வந்துள்ளதாகவும் “சண்டே டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா ஜனாஸாக்களை எரிக்க வேண்டுமென்ற கொள்கையை சீனா கடந்த 2020 பெப்ரவரி முதல் கடைப்பிடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது எரிக்கும் நிலைப்பாட்டை மாற்றி அடக்க அனுமதித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா ஜனாஸாக்களை உலக நாடுகள் அனைத்தும் அடக்கம் செய்து வரும் நிலையில் உலகில் சீனாவும், இலங்கையும் மாத்திரமே ஜனாஸாக்களை எரித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது சீனாவும் அடக்க அனுமதித்துள்ள நிலையில் உலகில் இலங்கை மாத்திரமே எரிக்கும் நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
COMMENTS