இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 740 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
01 - கொழும்பு 15 (மட்டக்குளி/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த, 95 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
02 - அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விஷமடைவு காரணமான அதிர்ச்சி மற்றும் இருதய செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
03 - குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 50 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த இன்று (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
04 நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சுவாசத் தொகுதி செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
05 - கொழும்பு 12 (வாழைத்தோட்டம்/ புதுக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் புற்று நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
06 - ஊர்காவற்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் பக்கவாத நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
07 ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 61 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 நியூமோனியா மற்றும் நுரையீரல் புற்று நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
08 - குருதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த, 42 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
09 - மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், மாவனல்லை ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 740 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
COMMENTS