இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 890 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
உயிரிழந்தவர்களில் விவரங்கள் -
உயிரிழந்தவர்களில் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆண் ஆவார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (19) அவர் உயிரிழந்துள்ளார்.
சுவாச தொகுதி செயலிழந்தமை, குருதி விசமானமை, கொவிட் நியுமோனியா மற்றும் புற்றுநோய் போன்ற நோய் நிலைமைகள் இவரது மரணத்துக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மற்றைய நபர் திஹாரியவைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவராவார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (20) அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியுமோனியா இவரது மரணத்துக்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS