வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்திருக்கின்றார்.
இதன் பிரகாரம் மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் சுமார் 22 ஆயிரத்து 500 பேரை அழைத்து வரப்படவிருப்பதாகவும் ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
COMMENTS