ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமான கூட்டத்தொடர் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன காணொளி தொழிநுட்பம் ஊடாக எதிர்வரும் 24 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை தௌிவுப்படுத்தவுள்ளார்.
ஐக்கிய இராச்சியம், கனடா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக யோசனையொன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
COMMENTS