- அசார்தீன்
பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இனைந்து இன்று அதிகாலை கற்பிட்டி பள்ளிவாசல்துரை அம்மாத்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 51 உரை பைகளில் அடைக்கப்பட்ட 1380 கிலோ 500 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து நாட்டிற்கு படகு மூலம் குறித்த மஞ்சள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொலிஸாரின் உத்தரவுக்கு அமைய கற்பிட்டி நீதிமன்றத்துக்கு முன்னாள் உள்ள தரவையில் வைத்து எரித்து அழிக்கப்பட்டது.
கைது செய்யபட்டவர் மதுரங்குளி பகுதியென பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த சந்தேக நபரை நாளை கற்பிட்டி நீதிமண்ரத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
COMMENTS