பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதி நாள் போராட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், யாழ்ப்பாணத்திற்கு நேற்று (07) சென்றிருந்தார்.
இதன்போது, கிளிநொச்சி – முறிகண்டியில் ஊடகவியலாளர்கள் மனோ கணேசனை வழிமறித்து, கேள்விகளை தொடுத்துள்ளனர்.
இதற்கு மனோ கணேசன் பதிலளித்த சந்தர்ப்பத்தில், அங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், தனது கையடக்கத் தொலைபேசியில் மனோ கணேசனின் கருத்தை பதிவு செய்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ஊடகவியலாளர்களை நோக்கி கருத்து தெரிவித்த மனோ கணேசன், இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தரின் கையடக்கத் தொலைபேசியை நோக்கி கருத்துரைக்க ஆரம்பித்தார்.
ஜனாதிபதிக்கு தகவல்களை அறிந்துக்கொள்ளுமாறு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பார்த்து, மனோ கணேசன் கருத்துரைத்தார்.
வீடியோ
COMMENTS