haiiii

பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே கேட்கவில்லை - முஜிபுர் ரஹ்மான் MP

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் கூறியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திற்கு மிகத்தெளிவாகக் கேட்டிருக்கிறது. ஆனால் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அது கேட்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி தொடர்பிலும், ஆளும் தரப்பினர் மாறுபட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பிலும் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிகத்தெளிவாகவே குறிப்பிட்டார்.

அது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர்வதேசத்திலுள்ள பலருக்கும் மிகத்தெளிவாகக் கேட்டிருக்கிறது. எனினும் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கும் பின்னால் இருந்தவர்களுக்குமே அது கேட்கவில்லை. இது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.

அதுமாத்திரமன்றி பிரதமர் பாராளுமன்றத்திலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். வாகனத்தில் செல்லும்போது ஊடகங்களுக்குக் கூறவில்லை. எனவே பொறுப்புவாய்ந்த இடத்தில் பொறுப்புடன் வெளியிடப்பட்ட கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6820,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16196,கட்டுரைகள்,1561,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3952,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2836,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே கேட்கவில்லை - முஜிபுர் ரஹ்மான் MP
பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே கேட்கவில்லை - முஜிபுர் ரஹ்மான் MP
https://1.bp.blogspot.com/-x-taEFOKt3Y/YCj-aDx2L5I/AAAAAAABuNk/JfHmpvXhaMMa1kf8ClCKWnSVBHRoDnkTQCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-x-taEFOKt3Y/YCj-aDx2L5I/AAAAAAABuNk/JfHmpvXhaMMa1kf8ClCKWnSVBHRoDnkTQCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/02/mujibur_14.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/02/mujibur_14.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy