இன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்த கருத்துக்கள்.
மலையக தோட்ட மக்களின் 1000 ரூபா பிரச்சினை இன்று நாட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது, எங்கள் கோரிக்கைகள் என்றாலும் இன்றுள்ள தலைவர்களும் தான் தேர்தல் காலங்களில் பல மேடைகளில் கூறினார்கள். பல கட்ட பேச்சுவார்தைகள் மற்றும் பல கட்ட இழுத்தடிப்புகளுக்கும் பிறகு விடயப் பெறுப்பு அமைச்சரும் ரமேஷ் பத்திரனவும் 1000 ரூபா வரங்குவதாக வாக்குறுதியளித்தார்.
மறைந்த முன்னால் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களும் அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தார். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிரதமரும் இதை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
கூட்டு ஒப்பந்தம் முறை தடை செய்யப்பட்டதாக தெரிவித்து மீண்டும் மலையகத்தில் ஒர் உற்சாகத்தை ஆளும் தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். ஈ பி எப்,ஈ டி எப் விடயங்கள் தெளிவற்று இருக்கின்றன.1000 ரூபா சம்பளம் வழங்கவுள்ள விடயத்தின் சில ஷரத்துகள் தெளிவற்றிருக்கிளது.அவை தெளிவாக இருக்க வேண்டும்.
புதிய ஏற்பாடுகளில் 1000 ரூபா தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்ட பட வேண்டும் அதை அவர்கள் தான் தீர்மாணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஏமாற்று மோசடி இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அரசாங்கம் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.கம்பனிகள் திருத்த சட்டம் குறித்து மீள பார்க்ப்பட வேண்டும்.
1000 ரூபா சம்பளம் எங்கள் மக்களுக்கு வழங்காவிடின் நாடு தளுவிய போராட்டம்,கடைகள் அடைப்புப் போராட்டங்களை நாட்டின் சகல முற்போக்கு சக்திகளுடன் இனைந்து முன்னெடுப்போம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.
இன்று நாட்டிலும் குறிப்பாக மலையக மக்கள் வாழ்க்கை செலவு குறித்த மிக மோசமான நிலைமைகளை முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
எனவே இன்னும் காலம் தாழ்தாது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு உரிய தரப்பை வேண்டிக் கொள்கிறோம் இல்லை எனில் ஏலவே கூறிய ஆர்ப்பாட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம் அதற்காக நாங்கள் பின் நிற்க மாட்டோம்.
இன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
1000 ரூபா சம்பளப் பிரச்சிணையை வைத்துக் கொண்டு மலையக மக்களுடன் விளையாட வேண்டாம். பல கட்ட வாக்குறுதிகளுக்கு பிறகும் சம்பள நிர்ணய சபையால் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த நிறுவனத்தால் வழங்கினாலும் பருவாயில்லை.ஒப்புதல் அளிக்கப்பட்ட விதமாக வழங்குங்கள். தேர்தலின் போது மலையக மக்களும் இந்த ஆட்சிக்காக வாக்களித்தனர்.சம்பள நிர்ணய சபையால் வழங்குவதாக ஒரே தடவையில் கூறியதிலும் எங்களுக்கு ஒர் சந்தேகமுள்ளது.
1000 ரூபா அடிப்படை சம்பளத்தில் ஒப்புதல் அழிக்கப்பட்டாலும் மலையக மக்கள் காலாகாலமாக அனுபவித்து வரும் ஏனைய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போகும்,ஏனைய நலன் புரித் திட்டங்கள் இல்லாமல் போகும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
காலாகாலமாக பெற்று வரும் நலன் புரித் திட்டங்களுடன் இணைந்ததாகவே இந்த 1000 ரூபாவும் எங்கள் மலையக மக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும்.
தீர்வு கிடைக்காவிடின் மலையகமும் முழு நாடும் ஸ்தம்பிக்கும் விதமாக நாங்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்வோம்.
மலையக மக்களுக்கும் எங்களுக்கும் பொறுமைகளுக்கு ஒர் எல்லை உண்டு. இனி மோலும் எங்களால் இது குறித்து பொறுமை காக்க முடியாது. இந்நிலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
இன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
1000 ரூபா சம்பளப் பிரச்சிணை இன்னும் தீர்ந்த பாடில்லை.பல கட்ட வாக்குறுதிகளுக்கு பிறகு இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
தோட்டத்துறையில் வாழ்கின்றவர்களின் பிரச்சிணை மாத்திரமல்ல இது. இதில் 40 % சிங்கள மக்களாகும். தொன் பகுதி தோட்ட மக்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.நானும் ஒரு தோட்டத்துறை தொழிற் சங்கத் தலைவர்.கேகாலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களிலுள்ள தோட்டங்களில் பெருன்பான்மையினர் சிங்களவர்கள், இதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் தொழிற் சங்கம் என்ற அடிப்படையில் சாதி,இனம்,மதம் பார்க்காமல் நீதியாக நடந்து கொள்கிறோம்.இதை விளங்காமல் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றனர்.
கால நிலை மாற்றம் ஏற்படுவதை கருத்திற் கொள்ள வேண்டும்.6 மாதம் மழை காலம் இக்காலத்தில்
இறப்பர் குறைவு. வெயில் காலத்தில் தேயிலை குறைவு ஆகவே மக்களின் நிலைமை குறித்த சிந்திக்க வேண்டும்.சம்பளப் பிரச்சிணையை அரசாங்கம் எதிர்க் கட்சி என்று பாராமல் மனிதாபிமானமாக பார்த்து பேசுங்கள்.
நாட்டுக்கு அன்புள்ள மக்களாக மலையக சமூகம் எப்போதும் இருந்து வருகின்றனர்.இனவாதம் மத வாதம் அவர்களிடம் இல்லை.அமைதியான மக்கள் சமூகம்.கொவிட் பிரச்சினை காலத்திலும் கூட நாட்டிற்காக அந்த மக்கள் வேலைக்குச் சென்றனர்.
ஜனவரி மாத சம்பளம்,பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் இல்லை என்றால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஈடுபடுவோம்.முழு மலையகமும் ஸ்தம்பிக்கும் விதமாக நாங்கள் ஏற்பாடு செய்வோம்.ஜனவரி மாதம் முதல் எங்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா கிடைக்க வேண்டும்.
அதனோடுனைந்து சட்ட ஏற்றபாடுகளிலுள்ள ஏனைய நலன்புரித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தெரித்த அவர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக;
மனோ கனேஷன் கூறியதற்கு ஏற்ப தீர்வு கிடைக்கும் அவரை நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இந் நிலைக்கு எங்களை இட்டுச் செல்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு உரிய தரப்பிற்கு கூறுகிறோம் என்று தொரிவித்தார்.
COMMENTS