பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை அளிக்கும்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சரிடம் இந்த கோரிக்கையை இன்று அவர் விடுத்திருக்கின்றார்.
இது குறித்து விரைவில் சுகாதார அதிகாரிகளிடம் பேச்சு நடத்தவும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின் பாதுகாப்பு உட்பட பாராளுமன்றத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பாராளுமன்ற பணியாளர்களில் இருவருக்கு நேற்றைய தினத்தில் கொவிஷீல்ட் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS