கிராம மக்களின் அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே தான் கிராமங்களுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளளார்.
மீமூர பகுதியில் இன்று (13) இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் ´கிராமத்துடனான தொடர்பு´ என்ற நிகழ்ச்சிச் திட்டம் இன்று கண்டி மாவட்டத்தின் உடுத்தும்பர மீமூர கிராமத்தில் இடம்பெற்றது.
மீமூர கயிக்காவல கனிஸ்ட வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தி ஜனாதிபதி ளுடுவுஆழுடீஐவுநுடு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நவீன வகுப்பறையை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் மீமூர - உடும்தும்பர வீதியில் சேவையில் ஈடுப்படுவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
மீமூர கனிஸ்ட வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு கூடியிருந்த மாணவர்களையும், பொது மக்களையும் சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி, நான் மீமூர பகுதிக்கு வருகைதருவதை முன்னிட்டு சமூக ஊடகங்களில் சுற்றுச் சூழலை அழிக்க வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறில்லை மீமூர் கிராமம் என்பது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இன்று ஊடகங்களில் பிழையான செய்திகள் பரப்பப்படுகின்றன. இங்குள்ள வீதி காபட் இடப்பட்டு புனரமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது.
கைக்காவெல மாணவர்கள் தாம் உயர்தரம் படிக்க வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளதாக முறையிட்டனர். கலைத்துறை மாணவர்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம் ஒன்றும் கட்டடம் ஒன்றும் எம்மால் அமைத்து தரப்படும்.´ என்றார்.
COMMENTS