கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.
வார்த்தைகளினால் கூறிய விடயத்தை, விரைவில் செயலில் காட்டுவீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
COMMENTS