தனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு அழைப்பு மேற்கொண்டமைக்காக தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர், எதிர்வரும் செவ்வாய்கிழமை (23) இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
COMMENTS