ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கை, ஆசியாவில் சக்திமிக்க நாடாக மாற்றமடையும் என, வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்காரணமாகவே, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விக்ரமசிங்க தாக்கப்படுகிறார் என, கரந்தெனியவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் 250,000 வாக்குகளைப் பெற்ற பின்னர் கட்சி வீழ்ச்சியடையவில்லை என்றும் அது கட்சிக்கு பெரும் பலம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
COMMENTS