haiiii

தேய்வடைந்த டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு 3,500 ரூபா அபராதம்

- செ.தேன்மொழி

தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது, தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு 3,500 ரூபாய் அபராதமும் அத்தகைய வாகனங்களை செலுத்தி காயத்தை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25,000 ரூபா அபராதமும் அறிவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த விபத்துகளுக்கு வாகன சாரதிகளின் கவனக்குறைபாடு , மதுபோதை மற்றும் வாகனங்களின் குறைபாடுகளும் பிரதான காரணமாக உள்ளன. இதனால் அவற்றை தடுக்கும் வகையில் விசேட சோதகைளை மேற்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இன்று (22) திங்கட்கிழமை முதல் நாளை மறுதினம் புதன்கிழமை வரை இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்போது தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்று எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வாகன சில்லுகள் தரமானதாக காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , 2009 ஆம் ஆண்டு கொண்டு வரவரப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 145 ஆவது சரத்துக்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு வாகனமும் தரமான சில்லுகளை பயன்படுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இவ்வாறு தரமற்ற சில்லுகளை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணுவதற்காகவே இந்த சுற்றிவளைப்பு அடம்பெறவுள்ளது. இதன்போது தேய்ந்த சில்லுகளை பயன்படுத்திய வாகனங்களை அடையாளம் கண்டால் , அவற்றுக்கு எதிராக 3, 500 ரூபா அபராதம் அறவிடப்படுவதுடன் , அத்தகைய சில்லுகளை கொண்ட வாகனங்ககளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி காயமடையச் செய்தால் வழமையான சட்டவிதிகளுடன், 25 ஆயிரம் ரூபா பணத்தொகை அபராதமாக அறவிடப்படும்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,22,video,8,அரசியல்,6862,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,14,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16731,கட்டுரைகள்,905,கவிதைகள்,69,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,137,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3970,விளையாட்டு,788,வினோதம்,152,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: தேய்வடைந்த டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு 3,500 ரூபா அபராதம்
தேய்வடைந்த டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு 3,500 ரூபா அபராதம்
https://1.bp.blogspot.com/-dqzyp3m48_w/YFhRDwwyiII/AAAAAAABvq4/lnCUfC9rZYA9ZdnTebHF6OCB0wtv7IJ_gCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-dqzyp3m48_w/YFhRDwwyiII/AAAAAAABvq4/lnCUfC9rZYA9ZdnTebHF6OCB0wtv7IJ_gCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/03/ajitha.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/03/ajitha.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy