இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.
01 - கட்டுகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும்.
02 - எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும்.
03 - பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
COMMENTS