- எம்.றொசாந்த்
நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்ற யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார்.
அப்போது படகின் இயந்திர விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
COMMENTS